இஸ்லாமிய மதகுரு செக்கனூர் மவுலவி காணாமல் போன 20 வருட வழக்கின் குற்றவாளி விடுதலை

கேரளாவில் இஸ்லாமிய மதகுரு செக்கனூர் மவுலவி 20 வருடங்களுக்கு முன் காணாமல் போன வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி விடுவிக்கப்பட்டார்.

Update: 2018-10-15 14:01 GMT
கொச்சி,

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் நகரில் கடந்த 1993ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி இஸ்லாமிய மதகுருவான செக்கனூர் மவுலவி தனது வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார்.  அதன்பின் அவரை காணவில்லை.

இதுபற்றிய வழக்கை விசாரணை செய்து வரும் சி.பி.ஐ. அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு விட்டார் என தெரிவிக்கின்றது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஹம்சாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2010ம் ஆண்டு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பினை ஒத்தி வைத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற அமர்வு இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பொன்றில், மவுலவி கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் சில மர்மம் ஆன முறையில் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

அதனால் அவரது உடலை கண்டறிய முடியவில்லை என தெரிய வந்துள்ளது.டன், மவுலவி இறந்து விட்டார் என்று காட்டுவதற்கான எந்த சான்றும் இல்லை என கூறி ஹம்சாவை விடுவித்து உள்ளது.

உள்ளூர் போலீசார் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளாலும் மவுலவியின் உடலை இதுவரை கண்டெடுக்க முடியவில்லை.

மேலும் செய்திகள்