முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் காங்கிரசில் இணைந்தார்

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜஸ்வந்த் சிங் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

Update: 2018-10-17 23:15 GMT

புதுடெல்லி,

ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், ராஜஸ்தானில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.

அங்கு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று திடீரென அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அப்போது ராஜஸ்தான் முன்னாள் முதல்–மந்திரி அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சச்சின் பைலட், அவினாஷ் பாண்டே, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் இருந்தனர். மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் ராஜஸ்தான் தேர்தலில் ராஜபுத்திரர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்கும் என அந்த கட்சித்தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதைப்போல மன்வேந்திர சிங்கின் கட்சி மாற்றம், பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்