சபரிமலைக்கு செல்ல முயற்சி: பாரதீய ஜனதா தலைவருடன் மங்களூரில் திட்டமிட்டாரா பாத்திமா ரெஹானா?

சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தது குறித்து பாரதீய ஜனதா தலைவர் ஒருவருடன் மங்களூரில் திட்டமிட்டதாக ரேஸ்மி நாயர் கூறியதை பாத்திமா ரெஹானா மறுத்து உள்ளார்.

Update: 2018-10-20 05:34 GMT
கொச்சி

சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்று பிரபலமானவர் பாத்திமா ரெஹானா. ரெஹானா மாடலாகாவும் நடிகையாகவும் உள்ளார். அவரது கவர்ச்சி படங்கள் நேற்று வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், கேரளாவில்  ஆன்லைன் விபசாரத்தில் சிக்கி முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட ரெஸ்மி நாயர்,  ரெஹானா சபரிமலைக்குள் நுழைவதற்கு முன்  பாரதீய ஜனதா தலைவர் சுரேந்திரன் என்பவரை மங்களூரில் சந்தித்தார் என்றும் அதன் பிறகே இது போன்ற சமபவம் நடைபெற்று உள்ளதாக கூறினார். மேலும் அவர்கள் சந்திப்பின் போது சபரிமலையில் பதற்றத்தை  தூண்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.

தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்  இந்த பதிவை பார்த்த பிறகு  அய்யப்பன் சன்னதிக்கு  2 பெண்கள் செல்ல முயற்சி மேற்கொண்டதில் சதி நடந்துள்ளதாக கூறினார்.

இதற்கு பதில் அளித்த ரெஹானா பா.ஜ.க. தலைவருடன்  தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்ட கூற்றுக்கள், சமூக ஊடகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டதாக கூறினார்.

ரெஹானா கூறும்போது,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் மாதவிடாய் வயதில் சபரிமலையில் பெண்களின் நுழைவை ஆதரிக்கும் ஒரு பதிவை பதிவேற்றியிருந்தார். என் நண்பர்களில் ஒருவர் இந்த இடுகையில் என்னை குறியிட்டார். நான் இந்த கருத்தை ஆதரித்தபோது, இந்த குறிப்பை ஏற்றுக்கொண்டேன். சுரேந்திரனுடனான எனது ஒரே தொடர்பு இது தான் என  என்று ரெஹானா மறுத்து உள்ளார்.

மங்களூரில் நான் சுரேந்திரனை  சந்தித்ததாகவும், அந்த சந்திப்பை அவர் அறிந்திருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என கூறி உள்ளார்.

ஆன்லைன் விபசார வழக்கில் ரெஸ்மி, ரெஹானாவின் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்