அரியானாவில் காவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி பலி

அரியானாவில் காவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Update: 2018-10-23 02:12 GMT
குர்கான்,

அரியானா மாநிலம் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதிபதியாக பணியாற்றுபவர் கிருஷ்ணகாந்த். கடந்த அக்டோபர் 13ந்தேதி நீதிபதி மனைவி ரிது (வயது 45), மகன் துருவ் (வயது 18) ஆகியோர் அங்குள்ள ஆர்காடியா மார்க்கெட்டிற்கு காரில் சென்றனர். அவர்களுடன் சென்ற பாதுகாவலர் மகிபால் திடீரென நீதிபதியின் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு நீதிபதியின் மனைவி ரிது அடுத்த நாள் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் துருவ் உயிருக்கு போராடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மகிபாலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ‘நீதிபதியின் பாதுகாவலராக பணியாற்றிய அரியானா போலீஸ் நிலைய தலைமைக்காவலர் மகிபாலை நீதிபதி அடிக்கடி திட்டியதாக தெரிகிறது. மேலும் தலைமை காவலர் விடுமுறை கேட்டும் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு காரில் சென்ற போது மகிபாலை நீதிபதி மனைவி திட்டி உள்ளார்.

இந்த மன உளைச்சலில் இருந்த பாதுகாவலர் மகிபால் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்’ என்பது தெரியவந்தது.  இந்நிலையில், காவலரால் சுடப்பட்டு, மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்