மலேசிய விமானம்: தங்கம் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

மலேசிய விமானத்தில் தங்கம் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்டனர்.

Update: 2018-10-29 17:45 GMT
விசாகப்பட்டினம்,

மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோலாலம்பூர் நகரில் இருந்து நேற்று இரவு ஏர் ஏசியா விமானத்தில் வந்திறங்கிய ஜபார் சாதிக் அசாருதீன்(வயது 34), ஜபார் சாதிக் ஷேக் அப்துல்லா(24), நயீம் முகமது சயீத்(27) ஆகிய 3 பயணிகளை விசாகப்பட்டினம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவர்கள் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 80 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது, தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்ட மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சென்னைக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்