2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற விரும்புகிறார்- மத்திய அமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற விரும்புவதாக ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரகுஸ்வா தெரிவித்து உள்ளார்.

Update: 2018-11-01 05:23 GMT
பாட்னா

பாட்னாவில் நடைபெற்ற கட்சி  நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான உபேந்திர குஸ்வா  கூறியதாவது:-

நிதிஷ்குமார் 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு  பிறகு முதல்வர் பதவியில் தொடர விரும்பவில்லை

பீகார் மக்கள் தான் யார் முதலவர்  எந்த கட்சி ஆளும் என  நிர்ணயிப்பார்கள். நிதிஷ் ஜி திருப்தி மற்றும் நிறைவுற்று உள்ளார். என கூறினார்.

இருப்பினும், நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும்படி அவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று அர்த்தமில்லை என்று கூறினார். யாரும் அவரை அவரது விருப்பத்திற்கு எதிராக வெளியேற்ற நிர்ப்பந்திக்க முடியாது என கூறினார்.

ராஷ்ட்ரீய லோக் சமதா  கடை தலைவர், கடந்த வாரம் ராஷ்டீரிய ஜனதாதள  தேஜஷ்வி யாதவுவை சந்தித்தார் அப்போது  அவரது எதிர்கால நடவடிக்கை குறித்து ஊகம் கொடுத்தார்,

மாநிலத்தில் போட்டியிட  ஒரு 'மரியாதைக்குரிய'  தொகுதி எண்ணிக்கையை அவர் விரும்பியதாக தெரிகிறது. என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்