முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி

முத்தலாக் அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Update: 2018-11-02 12:19 GMT
புதுடெல்லி

முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இயற்றியது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, அவசரச் சட்டத்தின் ஆயுள் வெறும் 6 மாதங்கள் மட்டுமே எனும்போது, ஏற்கெனவே கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழிந்துவிட்டதை சுட்டிக்காட்டியது.

மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அவசரச் சட்டத்தின் செல்லுபடித் தன்மையை நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு விட்டு விடுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.


மேலும் செய்திகள்