அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்தது

அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

Update: 2018-11-14 07:51 GMT
புதுடெல்லி

அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்தது. கச்சா, இயற்கை எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் (WPI) பணவீக்கம்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவீதமாக இருந்தது  அக்டோபரில் 3.68 சதவீதமாக இருந்தது. 

இன்று வெளியிடப்பட்ட  மத்திய அரசின் தகவல்படி,  கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறியீடு 4.1 சதவிகிதம் உயர்ந்தது. இயற்கை எரிவாயு  முந்தைய மாதத்தில் 95.9 லிருந்து 99.8 ஆக உயர்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் சக்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 107.2 லிருந்து 111.1 ஆக  3.6 சதவீதம் உயர்ந்து உள்ளது. நிலக்கரி  குறியீட்டு எண் விலை 0.2 சதவீதம் உயர்ந்தது.

உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 129.4 லிருந்து 129.5 ஆக 0.1 சதவீதம்  உயர்ந்தது.

மேலும் செய்திகள்