சபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு தேவஸ்தானம் மனு தாக்கல்

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் கேட்டு சபரிமலை தேவஸ்தானம் மனு தாக்கல் செய்ய உள்ளது.

Update: 2018-11-16 17:39 GMT
பம்பை,

சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதற்கு பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு எதிர்புகளையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால், சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது. தடை உத்தரவு இருந்தும் பக்தர்களும், தேவஸ்தான போர்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இரண்டு மாத கால மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் கால அவகாசம் கேட்பது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளது.  இதற்கான மனுவை நாளை அல்லது திங்கள்கிழமையன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக  திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்