புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-11-20 22:00 GMT
புதுடெல்லி,

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், எஸ்.தனலட்சுமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கோர்ட்டு உத்தரவின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், நியமன எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் மற்றும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் வாதாடி வந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்