சபரிமலை: அரசு செயல்படுத்தி இருக்கும் வசதிகளை பார்வையிட வருமாறு கேரள எதிர்க்கட்சி தலைவருக்கு மந்திரி அழைப்பு

அரசு செயல்படுத்தி இருக்கும் வசதிகளை பார்வையிட சபரிமலைக்கு வாருங்கள் என கேரள எதிர்க்கட்சி தலைவருக்கு மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2018-12-01 18:21 GMT
சபரிமலை,

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறாமல் இருக்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

குறிப்பாக சபரிமலையில் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், அங்கு செல்லும் பக்தர்களை போலீசார் மிரட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதை வலியுறுத்தி மாநில சட்டசபையிலும் அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டை மாநில இந்து அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மறுத்துள்ளார். அங்கு பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்திருப்பதாக கூறிய அவர், அவற்றை பார்வையிடுவதற்காக சபரிமலைக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். அவ்வாறு வந்தால் சென்னிதலாவுடன் தானும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்