மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2018-12-03 21:15 GMT
புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வெடித்த மிகப்பெரிய கலவரத்தில் ஏராளமானோர் பலியானார்கள். அவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் ஒருவர்.

இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, அப்போது குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு கலவரத்தில் தொடர்பு ஏதும் இல்லை எனக்கூறி அவர்களை விடுவித்தது.

இதனை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஜக்கியா ஜாப்ரி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, ஜக்கியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

இதை எதிர்த்து ஜக்கியா ஜாப்ரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று இதே நீதிபதிகள் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ம் வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்