இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

Update: 2018-12-06 23:30 GMT
புதுடெல்லி,

தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை (லைக்) குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர் தளத்தில் 4.3 கோடி பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கிறார்.

இதைப்போல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த பக்கத்தில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக 1.22 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 2-வது இடத்தையும், 1 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 3-வது இடத்தையும் பெற்று உள்ளனர்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்த படத்தை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த படம் அதிக விருப்பங்களை குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்