தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: வரிசையில் நின்று வாக்களித்த அல்லு அர்ஜூன்

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அல்லு அர்ஜூன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2018-12-07 03:35 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.


அக்கினேனி நாகார்ஜூனா

வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பதை காண முடிகிறது. பிரபல டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜூன், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோல், நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அமலா நாகார்ஜூனா ஆகியோரும் இதே வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். 

மாநில நீர்பாசனத்துறை மந்திரி டி ஹரிஸ் ராவ், சித்திபேட் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 102-ல் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்