ஜனவரி மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

ஜனவரி மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.

Update: 2018-12-21 07:43 GMT
புதுடெல்லி, 

ஜனவரி மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, வேலூர் அல்லது கோவையில் பிரசார பொதுக்கூட்டம் நடத்த பரிசீலனை நடப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஜனவரி 27-ம் தேதி தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறார். 

பிரதமரின் தமிழக வருகை அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி தலைமையில் நாடு முழுவதும்100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்