பிசிசிஐ அமைப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிசிசிஐ மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-12-22 04:16 GMT
சென்னை,

மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.  இந்த  வழக்கில் மத்திய அரசு மற்றும் பிசிசிஐ பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்