டெல்லியில் கடும் குளிர் ! மக்கள் அவதி

டெல்லியில் இன்று காலை கடுமையான குளிர் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2018-12-26 06:03 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொது இடங்களில் மக்கள் தீயை மூட்டி குளிர்காய்கின்றனர். பகலிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் விளக்குகளுடன் வாகனங்கள் செல்கின்றன. 

நடப்பு குளிர்கால பருவ நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று காலை கடும் குளிர் நிலவியது. வெப்ப நிலையானது 3.6 டிகிரி செல்சியாக இருந்தது. டிசம்பர் 28 ஆம் தேதி வெப்ப நிலை 3 டிகிரி வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடும் குளிர் காரணமாக சாலையோரம் வசிக்கும் மக்கள் பெருத்த அவதிக்குள்ளாகினர். உடலை நடுங்க வைக்கும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக இரவு நேர தங்கும் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி நிலவரப்படி ஈரப்பதம் 97 சதவீதம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று குறைந்த பட்ச வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. 

மேலும் செய்திகள்