மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 குறைப்பு

மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-31 13:40 GMT
புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

அதேபோல், மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் 2-வது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.6.52- குறைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஆறு மாதங்களாக சிலிண்டர் விலை கூடியே வந்த நிலையில், இந்த மாதம் இருமுறை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்