மே.வங்காளம்: சிலிகுரியில் சிறுத்தை தப்பியதால் வன விலங்கு சரணாலயம் மூடல்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சிறுத்தை தப்பியதால் வன விலங்கு சரணாலயம் மூடப்பட்டுள்ளது.

Update: 2019-01-01 16:07 GMT
சிலிகுரி,

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் பூங்காவில் இருந்து சிறுத்தை தப்பியது. தப்பிய சிறுத்தையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் இருந்து சிறுத்தை தப்பிவிடாமல் இருப்பதற்காக சரணாலயத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புத்தாண்டு தினமான இன்று குடும்பத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  

வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, வேலிப்பகுதியில் இருந்து தப்பிய சிறுத்தையை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறுத்தை தப்பியதால் பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

சிலிகுரி வனவிலங்கு சரணாலயத்தில், இரண்டு ஆசிய ஹிமாலயன் கருப்பு கரடிகள், மூன்று புலிகள், முதலைகள், ஒரு காண்டா மிருகம் ஆகிய விலங்குகள் இருக்கின்றன. 

மேலும் செய்திகள்