காங்கிரஸ் தலைமை பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது - ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைமை, பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டினார்.

Update: 2019-01-01 23:00 GMT
புதுடெல்லி, 

அமித்ஷா குஜராத் மந்திரியாக இருந்தபோது சொராபுதீன் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்ட்டர் என தொடரப்பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, மந்திரியாக இருந்த அமித்ஷா ஆகியோரை காங்கிரசின் முக்கிய எதிரிகளாக பார்த்தார். காங்கிரஸ் தலைமையின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அமித்ஷாவை தொந்தரவு செய்தது. அமித்ஷாவை அரசியலில் இருந்து அழிக்கும் முயற்சியாக ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டன.

இதற்காக அமித்ஷா மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் காங்கிரசின் சதி தோல்வி அடைந்துள்ளது. சொராபுதீன் போலி என் கவுண்ட்டர் வழக்கில் ராகுல் காந்தி தெரிவித்த ‘யாரும் கொல்லவில்லை, அவர்களாக இறந்தார்கள்’ என்ற கருத்தின் மூலம் அவர் பயங்கரவாதிகளை ஆதரிப்பது தெரிகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்