தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி தகவல்

தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-04 19:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே, தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, கடந்த ஆண்டு 1,123 குடிநீர் நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், 490 நிறுவனங்களின் குடிநீர் தரமற்றவை என கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்