5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகிறது

5 மாநிலங்களில், அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன.

Update: 2019-01-04 20:30 GMT
புதுடெல்லி,

பல்வேறு தனியார் வானொலி நிலையங்களின் வருகை, அதிதீவிர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அகில இந்திய வானொலியை கேட்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் 5 மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள இந்திய வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தின் ஆமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் சில்லாங் ஆகிய 5 மண்டலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன.

மேலும் செய்திகள்