நிலத்தடி நீருக்கு கட்டணம்; மத்திய அரசு ஆணைக்கு தடை - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவது தொடர்பான மத்திய அரசின் ஆணைக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

Update: 2019-01-04 21:30 GMT
புதுடெல்லி,

தொழிற்சாலைகள், குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய நீர்வள அமைச்சகம் கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, அந்த அறிவிப்பாணையை செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயம் மேலும் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் அறிவிப்பாணையில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. எனவே, அதை செயல்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய வழிமுறை வகுக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., நிதி ஆயோக் போன்ற அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் இவ்வாறு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்