பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-01-07 15:22 GMT


5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின்  செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இப்போது கொண்டு வரும் இடஒதுக்கீடை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியமாகும். மக்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்த்தால் மசோதா முடங்கும். 

4 வருடங்கள், 8 மாதங்கள் ஆட்சி செய்த போது இதுபற்றி ஏன் நினைக்கவில்லை? தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், இது வித்தை காட்டும் நடவடிக்கையாகும் என்று விமர்சனம் செய்யும் காங்கிரஸ்,  அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா? என்று  கேள்வி எழுப்பியுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் நாளை கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்