காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு

காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டியிட உள்ளார், மேலும் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

Update: 2019-01-11 21:15 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல். 35 வயதான இவர், 2009-ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதலாவது காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 9-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவதற்கும், முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில், ஷா பேசல் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என்றும் அவர் கூறினார். பிரிவினைவாத ஹூரியத் மாநாடு இயக்கத்தில் தனது ஆட்சிப்பணி அனுபவம் பயன்படாது என்பதால், அதில் சேர மாட்டேன் என்றும் ஷா பேசல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்