சிக்கிம் மாநிலம்: பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகள் - ராணுவ வீரர்கள் மீட்பு

சிக்கிம் மாநிலத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகளை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

Update: 2019-01-11 21:30 GMT
கொல்கத்தா,

சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான லசாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு 11 குழந்தைகள், 34 பெண்கள் உள்பட 150 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனைவரும் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் அனைவருக்கும் முதலுதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் சென்ற 43 வாகனங்களில், 23 வாகனங்கள் மீட்கப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி சிக்கிமில் உள்ள நாதுலா பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்