பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

Update: 2019-01-12 13:28 GMT
புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 8ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்நிலையில் பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 9ந்தேதி மாநிலங்களவையில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.  நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், மத்திய மந்திரிசபை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்