எந்த ஒரு அரசியல் கூட்டணியையும் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம் -பா.ஜனதா

எந்த ஒரு அரசியல் கூட்டணியையும் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம் என பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2019-01-18 12:05 GMT
2019 தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பிற எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டுகிறது. உ.பி.யில் காங்கிரசை கழற்றிவிட்டு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை அறிவித்துள்ளது. மாநிலத்தில் இருபெரும் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது  பா.ஜனதாவிற்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியுள்ளது. 80 பாராளுமன்றத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம், எந்த கட்சி ஆட்சியில் அமரும் என்பதை தீர்மானம் செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

2014-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. 73 தொகுதியை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. இப்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி பா.ஜனதாவிற்கு சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எந்தஒரு அரசியல் கூட்டணியையும் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம் என பா.ஜனதா கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசுகையில், “தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியும். எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன,” என கூறியுள்ளார். பயம் உள்ளவர்கள்தான் கூட்டணியை தேர்வு செய்துள்ளார்கள். கொள்கையளவில் வேறுபாடுகளை கொண்ட கட்சிகள் ஏற்கனவே பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அவர்களால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியவில்லை. எந்தஒரு அரசியல் கூட்டணியையும் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம்,” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்