பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை, வெட்கக்கேடானது பிரகாஷ்ராஜ் விமர்சனம்

பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை, வெட்கக்கேடானது என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-01-18 15:51 GMT

பெங்களூரு, 


பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டம் வெட்கக்கேடானது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், பா.ஜனதா சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. மக்களின் பிரச்சினைகளை பற்றி அந்த கட்சி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதே போல் தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்று கூறி செயல்படுபவர்களுக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றார். 

மேலும் செய்திகள்