உத்தரபிரதேசத்தில் காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட 13 பேர் மீது வழக்கு

உத்தரபிரதேசத்தில் காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-01-31 10:29 GMT
லக்னோ, 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவ பொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.  இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்