எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும் என பாரதீய ஜனதா தெரிவித்து உள்ளது.

Update: 2019-02-06 11:48 GMT
லக்னோ,

உத்தரபிரதேச பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். இவர் பேசும்பொழுது, பாரதீய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என அச்சமடைந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது இருப்பிடத்தினை தக்க வைக்க ஒன்றிணைந்து உள்ளன.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததில் சேறு தோன்றியுள்ளது. இந்த சேற்றில் தாமரை மலரும் என கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி மற்றும் அல்லாவின் ஆசியால் 2019-ம் ஆண்டில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

ராம பக்தரான ஆஞ்சநேயரை ஒரு முஸ்லிம் என கூறி ஊடகங்களின் கவனத்தினை ஈர்த்தவர் நவாப். அனுமனின் பெயர் ரஹ்மான், ரம்ஜான், பர்மான், ஜீஷன் போன்ற முஸ்லிம் பெயர்களுடன் ஒத்து போகிறது என தனது பேச்சிற்கு ஆதரவாக விளக்கமும் கொடுத்தார்.

தனது விருப்பத்தினை நிறைவேற்றினார் என்பதற்காக 30 கிலோ எடையுள்ள பித்தளை மணியை அனுமன் கோவிலுக்கு காணிக்கையாக இவர் வழங்கியுள்ளார்.

ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.15 கோடி மற்றும் கிரீடம் ஒன்றையும் வழங்குவேன் என நவாப் உறுதி அளித்தும் உள்ளார்.

மேலும் செய்திகள்