2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன - வாட்ஸ் அப் பகீர் தகவல்

2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

Update: 2019-02-06 15:07 GMT
புதுடெல்லி,

குறுஞ்செய்திகளை பகிரப்பயன்படும் செயலியான வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் வதந்திகளால் பெரும் சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வாட்ஸ் அப் கொண்டுவந்தது. ஒரு செய்தியை குறைந்தபட்சம் 5 நபருக்குதான் ஒரே நேரத்தில் பகிரமுடியும் என கொண்டுவந்தது. இதனையடுத்தும் போலியான செய்திகள் பரப்பப்பட்டுதான் வருகிறது. 

நாட்டில் வாட்ஸ் அப் மூலம் வதந்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இரு முறை நோட்டீஸ் அனுப்பியது. மக்களவையில் மத்திய அரசு அளித்துள்ள பதிலில், வாட்ஸ் அப் மூலம் வதந்திகள், பொய் செய்திகள் பரவுவது குறித்து மத்திய அரசு அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த வதந்திகளும், பொய் செய்திகளும் பரவுவதை தடுக்க பயனுள்ள தீர்வை விரைவில் கண்டறிய வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போது வாட்ஸ்-அப் நிறுவனம், 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என கூறியுள்ளது. போலி செய்தி பரவல் விவகாரத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஒரு மீது ஒருவர் குற்றம் சாட்டப்படுகிறது. அரசியல் கட்சிகளும் வாட்ஸ் அப் செயலியை தவறாக பயன்படுத்துகின்றன, இதனை செய்யக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட கட்சிகளின் விபரங்களையும், எந்த விதமான தவறுகளை அவை செய்கின்றன என்பது தொடர்பான தகவலையும் வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் செய்திகள்