மம்தாவுடன் தர்ணா போராட்டத்தில் அமர்ந்த 5 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை - மத்திய அரசு அறிவுறுத்தல்

மம்தாவுடன் தர்ணா போராட்டத்தில் அமர்ந்த 5 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-02-07 18:30 GMT
புதுடெல்லி, 

சி.பி.ஐ.யை கண்டித்து, கடந்த 3-ந்தேதி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மறுநாள் அவருடன் தர்ணாவில் சீருடை அணிந்து அமர்ந்திருந்த 5 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்காள அரசை மத்திய அரசு நேற்று கேட்டுக்கொண்டது.

டி.ஜி.பி. வீரேந்திரா, கூடுதல் டி.ஜி.பி.க்கள் வினீத் குமார், அனுஜ் சர்மா, கமிஷனர் கியான்வந்த் சிங், கூடுதல் கமிஷனர் சுப்ரதி சர்கார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.

மேலும், இந்த அதிகாரிகள் பெற்ற பதக்கங்களை பறித்தல், குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பணியில் ஈடுபட தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் செய்திகள்