டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-02-10 01:29 GMT
புதுடெல்லி,

டெல்லியின் கீர்த்தி நகரில் அமைந்த மரப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன.

தொடர்ந்து 2 மணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  இதனால் காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.  இத்தீவிபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்