உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Update: 2019-02-11 06:56 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் உள்ளது. சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள முகாம் சுற்றுச்சுவரை ஓட்டி அதிகாலை 3 மணியளவில் சந்தேக நபர்கள் நடமாடுவதை பாதுகாப்பு படையினர் கண்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள்  உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையே, நல்லா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரு நபர்களை ராணுவத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்