அசாமில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்வு

அசாமில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2019-02-23 17:03 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா தேயிலை தோட்டத்தில் ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வி‌ஷச்சாராயம் வாங்கி அருந்தினர். இதில் பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் வி‌ஷச்சாராய சாவு எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 கலால் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் உத்தரவிட்டதுடன், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தரவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ள சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்