உத்தர பிரதேச கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை காலணியால் தாக்கிய அக்கட்சி எம்.பி.

உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி. சரத் திரிபாதி, அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை காலணியால் தாக்கி உள்ளார்.

Update: 2019-03-06 15:05 GMT
உத்தர பிரதேசத்தின் சந்த் கபீர் நகரில் திட்ட குழு கூட்டம் ஒன்று இன்று மாலை நடந்தது.  இதில் பா.ஜ.க.வின் எம்.பி. சரத் திரிபாதி கலந்து கொண்டார்.  அவர் உள்ளூர் சாலை ஒன்றின் அடிக்கல்லில் தனது பெயர் இல்லை என கூறி ஆத்திரமடைந்து உள்ளார்.  ஆனால் சட்டசபை உறுப்பினரான ராகேஷ் சிங், இது என்னுடைய முடிவு என பதிலளித்து உள்ளார்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.  இது முற்றிய நிலையில், எம்.பி. மற்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தனது காலணியை கழற்றி எம்.எல்.ஏ.வை அடித்துள்ளார்.  இதனால் எம்.எல்.ஏ.வும் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரை அடித்துள்ளார்.  இதன்பின் இந்த சண்டையை அங்கிருந்தவர்கள் தடுத்துள்ளனர்.

இதனை அடுத்து மந்திரிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி லக்னோ நகருக்கு புறப்பட்டு சென்றனர்.  இதுபற்றி இருவரும் ஊடகத்திற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.  இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்