படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்

படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-03-07 08:40 GMT
அகமதாபாத்,

குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க ஹர்திக் படேல் விரும்புவதாகவும், ஆனால் சுயேச்சை வேட்பாளராக ஹர்திக் படேலுக்கு ஆதரவு தர காங்கிரஸ் விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது.  இதையடுத்து ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் 12-ம் தேதி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் குஜராத் மாநிலத்துக்கு வருகை தரவுள்ளனர். அப்போது ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி ஹர்திக் படேல் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்