தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.

Update: 2019-03-12 05:50 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் உள்நோக்கம் இருப்பதாக கூறி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்ததோடு, மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த நிலையில்,  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

மேலும் செய்திகள்