ரூ.90 கோடி வரி ஏய்ப்பு; முன்னாள் முதல் மந்திரி மாயாவதியின் செயலாளரிடம் வருமான வரி துறை சோதனை

ரூ.90 கோடி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியின் செயலாளரிடம் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

Update: 2019-03-12 13:40 GMT
புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல் மந்திரியாக மாயாவதி இருந்தபொழுது அவருக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம்.  இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்.  ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் லக்னோ நகரங்களில் இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி முதல் மந்திரியாக இருந்தபொழுது அவருக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம்.  கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்