மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 2.93 சதவீதம் ஆக உயர்வு

மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 2.93 சதவீத அளவில் உயர்ந்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-14 08:42 GMT
புதுடெல்லி,

மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 2.93 சதவீதத்திற்கு உயர்ந்து உள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவலில், உருளை கிழங்கு, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் போன்ற சமையல் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் பணவீக்கம் 4.84 ஆக உயர்ந்து உள்ளது.  இது கடந்த ஜனவரியில் 3.54 ஆக இருந்தது.

இதேபோன்று எரிபொருள் மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பொருட்களுக்கான மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 2.23 சதவீதம் ஆக உள்ளது.  இது கடந்த ஜனவரியில் 1.85 சதவீதம் ஆக இருந்தது.

மேலும் செய்திகள்