பா.ஜனதா பணக்காரர்களுக்கு பணம் கொடுக்கிறது, நாங்கள் ஏழைகளுக்கு கொடுக்க உள்ளோம் - ராகுல் காந்தி

பா.ஜனதா பணக்காரர்களுக்கு பணம் கொடுக்கிறது, நாங்கள் ஏழைகளுக்கு கொடுக்க உள்ளோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2019-03-26 10:26 GMT

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்து உள்ளார். இதுஒரு ஏமாற்று வேலை என பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காப்பர் சிங் வரி (கொள்ளையடிக்கும் வரி) ஒரு வரி மற்றும் சாதாரண வரியாக இருக்கும். கடந்த 5 வருடங்களாக மோடி அரசு பணக்காரர்களுக்கு பணத்தை கொடுத்தது, காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுக்கு பணத்தை கொடுப்போம் என உறுதியளித்துள்ளது. மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் அமல்படுத்தப்படும். 
 
பா.ஜனதா ஏழைகளை அழிக்க முயற்றி செய்கிறது. ஆனால் நாங்கள் ஏழ்மையை ஒழிப்போம் என உறுதியளிக்கிறோம். குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படுவதன் மூலம் இதனை உறுதிசெய்வோம்.

இதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று பா.ஜனதா கேள்வியை எழுப்புகிறது. கோடிக்கணக்கான பணத்தை பணக்காரர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம். மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போன்று பணம் ஏழைகளுக்கு செல்வதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்