தமிழக இடைத்தேர்தலில் சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க கோரி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

தமிழக இடைத்தேர்தலில் சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க கோரிய வழக்கினை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2019-03-29 19:42 GMT
புதுடெல்லி,

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சிறப்பு பார்வையாளர் குழு மற்றும் கண்காணிப்பாளரை நியமிக்கக் கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜராஜன், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தினார்கள். அதை தொடர்ந்து மனுதாரர் தரப்பினர் மனுவை வாபஸ் பெற்றதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்