வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு: சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்

வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-04-05 05:05 GMT
தெலுங்கானா, 

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சில இடங்களில் வருமான வரித்துறையும் பண நடமாட்டத்தை கண்காணித்து அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழகத்திலும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தும் நோக்கில், வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில்,  ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடப்பதாக தகவல் வெளியானது.

 இதையடுத்து, வருமான வரித்துறை சோதனையை கண்டித்து, விஜயவாடாவில் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

மேலும் செய்திகள்