ராணுவத்தை அரசியலாக்குகிறது : பா.ஜனதா மீது தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் பிரதிநிதிகள் அபிஷேக் மனு சிங்வி, ரந்தீப் சுர்ஜெவாலா உள்ளிட்டவர்கள் தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா மீது சில புகார்களை கொடுத்தனர். பின்னர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:–

Update: 2019-04-12 23:30 GMT

புதுடெல்லி, 

பிரதமர் மோடியும், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக ராணுவப்படைகளை அரசியலாக்கி வருகிறார்கள். ராணுவ நடவடிக்கைகளுக்காக ஓட்டு போடும்படி கேட்கிறார்கள். அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஒருசில நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கலாம்.

மோடி பற்றிய இணையதள தொடரையும் நிறுத்த வேண்டும். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் முரண்பாடான வேட்புமனு குறித்தும் புகார் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்