100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அதன் நினைவாக ரூ.100 நாணயத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

Update: 2019-04-13 15:26 GMT
அமிர்தசரஸ்,

கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில்  ஏராளமானோர் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. எனினும் அவர்கள் கலையவில்லை. 

இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 100-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100-வது ஆண்டு  நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.

மேலும் செய்திகள்