அரியானா முன்னாள் முதல் மந்திரியின் வீடு, நிலம் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

அரியானா முன்னாள் முதல் மந்திரியின் வீடு, நிலம் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது.

Update: 2019-04-15 15:20 GMT
அரியானாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 84).  இந்திய தேசிய லோக் தள கட்சியை சேர்ந்த இவர் முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற ஆசிரியர்களை பணியமர்த்தினார் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுபற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.  இதில் குற்றவாளி என கண்டறியப்பட்டு அவருக்கும் அவரது மகன் அஜய் சிங் சவுதாலாவுக்கும் 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  எனினும் அவரது தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அமலாக்க துறை விசாரணை நடத்தியது.  இதில், அவரது குடியிருப்பு, மனை, வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  இவற்றின் மதிப்பு ரூ.3.68 கோடி ஆகும்.

மேலும் செய்திகள்