நாடாளுமன்ற தேர்தலில் வணிகர் சங்க கூட்டமைப்பு பா.ஜனதாவுக்கு ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் வணிகர் சங்க கூட்டமைப்பு பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Update: 2019-04-21 22:18 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் பல்வேறு பெயர்களில் சங்கங்களை உருவாக்கி உள்ளனர். இந்த சங்கங்களின் கூட்டமைப்பு, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டது. இதில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள முக்கியமான வர்த்தக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, நாட்டின் அரசில் சூழல் குறித்து விவாதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்த கூட்டமைப்பின் செயலாளர் கந்தெல்வால் கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான இந்த அமைப்பில் நாடு முழுவதிலும் இருந்து 7 கோடிக்கும் மேலான வணிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 195 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வணிகர்கள், அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் உள்ளனர். இந்த முடிவின் மூலம் நாட்டில் பெரும்பாலான வர்த்தகர்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்