சிறையில் லாலு பிரசாத்தை கொலை செய்ய சதி - ராப்ரிதேவி குற்றச்சாட்டு

சிறையில் லாலு பிரசாத்தை கொலை செய்ய சதி நடப்பதாக ராப்ரிதேவி குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-21 22:27 GMT
பாட்னா,

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக ஜார்கண்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், தனது கணவரை சிறையில் விஷம் வைத்து கொலை செய்ய சதி நடப்பதாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டி உள்ளார். ராப்ரிதேவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிறையில் எனது கணவரை விஷம் கொடுத்து கொலை செய்ய பா.ஜனதா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள் சதித்திட்டம் தீட்டி உள்ளன. சிறையில் அவரை சந்திக்க மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் செய்யவில்லை. லாலுவுக்கு ஆபத்து ஏற்பட்டால் வீதிகளில் போராட்டம் வெடிக்கும்” என கூறியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது.

மேலும் செய்திகள்