ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2019-04-22 05:47 GMT
புதுடெல்லி,

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ரவி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்